
கயிறு
Books For Children :
கயிறு - விஷ்ணுபுரம் சரவணன்
ரொம்ப வருஷமா இது என் பழக்கம்’ என்று நாம் சொல்லும் அனைத்துமே என்றோ ஒருநாள் ஆரம்பித்ததுதான். நீண்ட காலமாகப் பின்பற்றப்படுவதால் மட்டுமே அந்தப் பழக்கம் சரியானது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எதைச் செய்தாலும் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். குழப்புவதுபோல இருக்கிறதா? நம் வீட்டு வாசல் நிலையில் மஞ்சள் பூசும் பழக்கம் உள்ளது அல்லவா? இது நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இது எதற்காக என்றால் மஞ்சள் ஒரு கிருமி நாசினியாகச் செயல்படும். அது ஒருவகையில் வீட்டினருக்கு ஆரோக்கியம் தருகிறது. ஆனால், இப்போது பல வீடுகளின் வாசல் நிலைகளில் மஞ்சள் கலரில் பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். அதனால், மஞ்சள் பூசும் பழக்கத்தின் பலன் கிடைக்கவே போவதில்லை. எனவேதான் எந்தப் பழக்கம் என்றாலும் ஏன்.. எதற்கு என்று கேட்டுப் பழக வேண்டும். இந்தக் கதையிலும் செழியனுக்கு புதிய பழக்கம் ஒன்றை ஒருவர் பழக்கித் தர நினைக்கிறார். அது என்ன… எதற்காக… செழியனின் அம்மா அந்தப் பழக்கத்திற்கு சம்மதம் சொன்னாரா என்பதைத் தெரிந்துகொள்வோம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.