சாதி, வர்க்கம், மரபணு
ப.கு.ராஜன், ஒரு மின்பொறியாளர், இந்தியாவிலும் , இந்தியாவிற்கு வெளியிலுமாக 25 ஆண்டுகளுக்கு மேலாக எண்ணை , எரிவாயு அரங்கில் பொறியியல் மற்றும் பொறியியல் மேலாண்மைத் துறையில் பணியாற்றியுள்ளார். இடதுசாரி - மற்றும் முற்போக்கு அரசியல் ஈடுபாடும் செயல்பாடும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இவரது புரட்சியில் பகுத்தறிவு நூல் அறிவு தளத்தில் மிகுந்த விவாதத்தை உருவாக்கியது. |இந்திய மார்க்சிஸ்டுகளுக்கு இருக்கும் 0:20மிகப் பெரிய சவால் 'சாதி'. சாதிக்கு எதிராய் இதுவரை நீர்பல்வேறு முனைகளிலும் தொடுக்கப்பட்ட போர்கள் எதுவும் முழு வெற்றி காணவில்லை. சாதியின் அடிப்படை, தோற்றம்,'இருப்பு நிலை. இயங்கு விதிகள் எல்லாம் மீண்டும் _ முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதும் புரிந்து | கொள்ளப்படுவதும் மனத் தடையற்று விவாதிக்கப்படுவதும், 'இன்றைக்கு உடனடித் தேவையாக முன்வந்துள்ளது. ஆனால் இருக்கின்ற ஏற்றத் தாழ்வான நிலையின் மூலம்பலன் பெற்றவர்கள் இந்த விவாதத்தை நடக்கவிடாது 'செய்வதில் மிகுந்த ஒற்றுமையோடு செயல்படுகின்றனர். அத்தோடு பொதுவான கருத்துத் தளத்தை தங்கள் ஊடக,அரசு இயந்திர ஜனநாயகமற்ற அமைப்புகளின் பலத்தால் பொய்களாலும்,அரை உண்மைகளாலும் நிரப்புகின்றனர்.இந்த விஷச் சூழலிலிருந்து விடுபடும் எத்தனத்தோடு சில தரவுகள்,புள்ளி விவரங்கள் விவாதப் புள்ளிகளை முன்வைப்பதே இந்நூலின் நோக்கம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.