இந்நாள் இதற்கு முன்னால்..!
உலகில் முதன்முதலில் நீண்ட தொலைவு கார் ஓட்டியவர் ஒரு பெண்தான் (பென்ஸின் மனைவி பெர்த்தா பென்ஸ்)!
’80 நாட்களில் உலகைச்சுற்றி’ என்பதைச் சோதிக்கும் பயணத்தை ஒரு பெண்தான் தனியாக மேற்கொண்டார்!
உண்மையிலேயே வாழ்ந்த ஓர் உளவாளியை அடிப்படையாகக் கொண்டே, ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் உருவாக்கப்பட்டது!
டாலர் என்ற சொல் ஜெர்மென் மொழியிலிருந்து உருவானது!
இங்கிலாந்து அரசருக்கு, போர்ச்சுகல்லின் வரதட்சிணையாக பம்பாய் வழங்கப்பட்டது!
அமெரிக்காவின் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல!
மிக அதிகமான முறை மாற்றியமைக்கப்பட்ட தேசியக் கொடி அமெரிக்காவினுடையது!
அமெரிக்கர்கள், 1920வரை குழந்தைகளை அஞ்சல் மூலம் அனுப்பி வந்தார்கள்!
வோல்க்ஸ் வேகன் கார் நிறுவனம் அரசு நிறுவனமாக ஹிட்லரால் தொடங்கப்பட்டது!
உலகின் மிகப்பெரிய 34 கிலோ முத்தை எடுத்த மீனவர், மதிப்புத் தெரியாமல் 10 ஆண்டுகள் கட்டிலுக்கடியில் போட்டிருந்தார்!
இன்று எந்தச் செய்தியும் இல்லை என்று பிபிசி வானொலி ஒருமுறை அறிவித்திருக்கிறது!
ஒரு கிலோவுக்கும் அதிக எடையுள்ள ஆலங்கட்டிகள் விழுந்த மழை பங்களாதேஷில் பெய்திருக்கிறது!
நயாகரா அருவி முழுமையாக உறைந்துபோய் 30 மணிநேரத்திற்கு நின்று போயிருக்கிறது!
லிதுவேனியாவில் புத்தகக் கடத்தல்காரர்கள் நாள் என்று ஒன்று கொண்டாடப்படுகிறது!
அணுக்குண்டைவிட அதிகச் சேதம் விளைவித்த ஒரு வான்வழித் தாக்குதலை டோக்கியோமீது அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது!
கோட்டையைக் காக்க முடியாத 4000லிதுவேனிய வீரர்கள் ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்டார்கள்!
ஒரு நாட்டின் அதிபராக 45 நிமிடங்கள் மட்டும் ஒருவர் இருந்திருக்கிறார்!
தங்கள் நகரின் அழகைக் கெடுத்துவிடும் என்று பாரிஸ் மக்கள் ஈஃபில் கோபுரத்தை எதிர்த்தார்கள்!