தோழர் பி.சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு
தமிழக விவசாயிகள் இயக்கத்தின் தலைசிறந்த தலைவரான, பி.எஸ்.ஆர். என்று அன்போடு அழைக்கப்படுகின்ற தோழர் பி. சீனிவாசராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு இச்சிறுநூல். இதை எழுதியவர் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள். அவர் பி.எஸ்.ஆரோடு உடன் செயலாற்றிய அனுபவத்தைப் பெற்றவர். அதனால் தனது முன்னுரையில் விவசாயிகள் இயக்க வரலாறு எழுதுவதற்கான ஆதார நூல்களில் ஒன்றுதான் இது என்றும், தமிழக விவசாயிகள் இயக்க வரலாறும், பி.எஸ்.ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறும் முழுமையாக ஆராய்ந்து எழுதப்பட வேண்டும் என்று ஆவலுறுகின்றார்.
நன்செயும் புன்செயும் கொழிக்கும் தஞ்சை என்று இலக்கிய வருணனையில் இறுமாந்து கிடக்கும் காவிரியின் கரைகளுக்கு வெளியேதான் பஞ்சைப் பராரிகளாகவும் பண்ணை அடிமைகளாகவும் ஆக்கப்பட்ட உழைக்கும் மக்களின் அவல வாழ்க்கை கேட்பாரற்றுக் கிடந்தது. அதைக் கேள்வி கேட்கத் துணிந்தவர்களின் அனுபவக் குரலை நாம் அறியச் செய்யும் ஒரு நூல் “பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ். தனுஷ்கோடி”.
பி சீனிவாசராவ்
கீழத்தஞ்சையில் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக போராடிய கம்யூனிச முன்னோடி பி சீனிவாசராவ்.
ஒரு பண்ணையடிமைக் குடும்பத்தில் பிறந்து அடிமை உழைப்பு, சாதிக் கொடுமை என்ற இரட்டை நுகத்தடியை வர்க்கப் போராட்டத்தினூடாக அறுத்தெறிந்த பி.எஸ் தனுஷ்கோடியின் வாழ்க்கைப் போராட்டத்தை விவரிக்கும் இந்நூல், படிக்கும் எவருக்கும் ஒரு நூலைப் படித்த ‘திருப்தியை’ அளிக்காமல் ‘மன அமைதியை’க் குலைத்துச் செயலுக்கிழுக்கும் இயக்கமாகவே எதிர்ப்படும்.
‘அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்ன செய்தார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்?’ என்பவர்களுக்கு முதலில் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது கீழத் தஞ்சை என்பதை அறிமுகப்படுத்துகிறது நூலின் முன் பகுதி