தீண்டாமை நனவிலி
தீண்டாமை நனவிலி
சமூகம் என்பது புறத்தில் அல்ல; அகத்தில் உள்ளது' என்று கூறும் நூலாசிரியர் தி.கு. இரவிச்சந்திரன் அனைத்துச் சமூக உறவுகளும் ஒருவிதத்தில் உளவியல் உறவு முறைகளாக விளங்குகின்றன என்கிறார். எனவே, சாதிய உறவுகள் உளவியல் உறவுகளாகின்றன, தீண்டாமை என்பது முழுமைக்கும் உளச்சிக்கலே (complex) என்று இந்நூலில் வாதிடு கிறார். அதைப் போக்குகின்ற உள் மருத்துவக் குறிப்புகளையும் அம்மூவர் வழியில் முன்வைக்கிறார். சாதிய உள்ளம் உளப்பகுப்பாய்வுக்குரிய ஒன்று. இந்த உள்ளத்தில் நனவு, நனவிலி பகுதிகள் இருக்கின்றன. இதனால், உளப் படிமுறைகளும் உளச் சிக்கல்களும் இயல்பாக அமைந்து விடுகின்றன. அதாவது, நனவு நிலைத் தீண்டாமையில் நனவிலி நிலைச் சிக்கல் பொதிந்துள்ளது அது என்ன என்பதை ஃப்ராய்டிய உள்ளம், பூங்கிய உள்ளம், லக்கானிய உள்ளம் கொண்டு, சாதிய உள்ளத்தைப் பொருத்திப் பகுத்தாய்ந்து கண்டறிய முயல்கிறது இந்நூல், இதைக் கொண்டு உங்களுள் சாதிய இருப்பு நிலைப் பற்றியும் சாதியத்தில் உங்கள் இருப்பு நிலைப் பற்றியும் சுயமதிப்பீடு செய்யலாம். தீண்டாமை என்பது உளச்சிக்கலாம். சமூகக் குறையா... ஆன்மீகத் தேவையா... விவரம் உள்ளே .