தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் (தொகுப்பு புலவர் த.கோவேந்தன்)
தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் (தொகுப்பு புலவர் த.கோவேந்தன்)
'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய குடி என்றும், உலக மொழிக்கெல்லாம் மூல மொழியாகவும். இந்திய மொழிக்கெல்லாம் தாய்மொழியாகவும் விளங்கும் தமிழ் தமிழினம், உலக நாகரிகத்தில் பெரும் பங்கு கொண்டோர் கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலமாக வந்தேறிகளால் - நான்கு வேதம் என்ற பொய் புரட்டுகளாலும் நூல் வருணம் என்ற மனுதரும சாதிப் பகுப்புகளையும் மக்களிடையே புகுத்தி ஆயிரம் தெய்வங்கட்கும் மதத் திமிரேற்றினர். ஆரியத்தின் பல்வேறு அட்டூழியங்களினால் தமிழ் அரசும் ஆட்சியும் மேன்மையும் ஆண்மையும் கலை-இலக்கியமும் சிதைந்தன. சிதைந்து கொண்டே வந்தன. அந்தக் காலத்தில் ஒழித்து இன்று அடிமைகளாய், அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாய், தீண்டத் தகாதவர்களாய், சூத்திரர்களாய் நாயினும் கீழாய் வாழ்ந்த தமிழ் மக்களை விழிப்புறச் செய்தார் ஈ.வே.ரா. பெரியாரின் பெருந்தொண்டு ஓர் அம்பேத்கரைத் தோற்றுவித்த தென்றால் மிகையன்று. பெரியார் எழுதியதைவிட பேசியவையே அதிகம். அந்தப் பேச்சுகள் 'குடியரசு’ - விடுதலை ஆகிய ஏடுகளில் அறுபதாண்டு காலம் எரிமலையாக வெடித்துக் கக்கின. அதன் விளைவு ஒட்டுமொத்த தமிழினம். இன்றும் சில கீழ்மைகளில் உழன்றாலும் உயிர்த்தெழுந்தது. உயர்ந்துள்ளது. சாதிச் சழக்குகளின் வேற்றுமைகள் சரிந்தன; மதத்தின் ஆணிவேர்கள் செத்து வருகின்றன. அரசியல், பொருளியல், சமூகவியலில் பெரியாரின் சிந்தனைத் தாக்கத்தால் எவ்வளவோ ஏற்றங்கள் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் ஓரினத்திற்காய் இருந்த வஞ்சகங்கள். கேடுகள் இன்று தமிழரிடையும் ஒற்றுமை இன்மையால் வெவ்வேறு வகையில் வெவவேறு வகை வாழ்வை அழிக்கின்றன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.