தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், பொதுவாக எளிதில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி தருவது கிடையாது. ஏனெனில் அவர்களில் பலர் - 'உயர்ஜாதி' பார்ப்பனர்கள் என்ற எண்ணத்தோடும், திரிபுவாதத்திற்கு இடம் தரும் வகையில் சில பதில்களை திரித்து வெளியிட்டு, குட்டையைக் குழப்பி, மீன் பிடிக்கத் தூண்டிலைத் தூக்குபவர்கள் என்பதால்தான்!
இதையும் மீறி, பலர் சிறந்த பேட்டிகளை சிறப்பான கேள்விகள் பதில்கள் என்று பெற்று, அறிவு நாணயத்துடன் நடந்து கொள்பவர்களும் அவர்களில் சிலர் உண்டு.
அத்தகையோர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களைப் பேட்டி கண்டு பெற்ற அரிய செய்திகள் இந்த நேர்காணல் தொகுப்பின் மூலம் நாம் அனைவரும் அறியலாம்!
இதனைத் தொகுக்க உதவிய நமது தோழர்கள் மு.ந.மதியழகன், பேராசிரியர் இரா.கலைச்செல்வன், மேலாளர்கள் ப.சீதாராமன், சு.சரவணன், நூலகர் கி.கோவிந்தன், வை.கலையரசன் அனைவருக்கும் நமது உளப்பூர்வமான நன்றியும் பாராட்டும்.
- கி.வீரமணி