தமிழர் வரலாறு சில கேள்விகளும் தேடல்களும்
தமிழர் வரலாறு குறித்த பற்பல ஆய்வுகள் வந்துவிட்டன. அவை பலதரப்பட்டவை. திராவிட வரலாற்றியல் சார்ந்தவையே அவற்றில் அதிகம். அதற்கடுத்த நிலையில் மார்க்சிய வரலாற்றியல் நூல்கள் அமைகின்றன. இவையல்லாது சாதியப் பார்வையிலும், வட்டாரப் பார்வையிலும் ஆன நூல்களும் குறைவற்று வெளிவந்துள்ளன. அடையாள அரசியலுக்கானதும், கட்டுடைத்தலுக்குமான வரலாற்றியலும் தமிழில் வராமல் இல்லை . இவை யாவும் தமிழர் வரலாறு குறித்த பற்பல கருத்தியல்களை முன்வைக்கின்றன. நற்பேறாக, மதம் சார்ந்த வரலாற்றியல் தமிழகத்தில் வேர் கொண்டுவிடவில்லை.
தமிழர் வரலாற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்வதில் மார்க்சியம் சாராத ஆனால் மார்க்சியத்தை நிராகரிக்காத ஆயவுகள் தற்போதைய ஆய்வாளர்கள் மத்தியில் பெரிதும் காணப்படுகின்றன. இவர்கள் திராவிட இயக்கம் முன்வைத்த வரலாற்றியலை ஏற்பதில்லை. குறிப்பாக இனவாதநோக்கிலான வரலாறு இவர்களால் நிராகரிக்கப்பட்டு பற்பல சமூகங்களின் வரலாற்றோடு ஒப்பிடும் 'ஒப்பீட்டு ஆய்வு முறை' ஒன்றினை இவர்கள் உருவாக்கி வருகின்றனர். தமிழர் வரலாறு குறித்த வளர்ச்சிக்கு இது ஓர் ஆரோக்கியமான வளர்ச்சியாகும்.
-தேவ. பேரின்பன்