Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்

Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00
‘தமிழ்நாடு' என்று நான் சொன்னதும், 'வாழ்க' என்று அவை உறுப்பினர்கள் (ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர்) ஒருங்கே சொல்வதற்குத் தங்களுடைய அனுமதியைக் கோருகிறேன். என்று, அவைத்தலைவர் ஒப்பம் பெற்று - முதலமைச்சர் அண்ணா - ‘தமிழ்நாடு' என்று கூற, உறுப்பினர்கள் ‘வாழ்க' என்று மும்முறை முழக்கமிடுகின்றனர்.
சொல்ல வல்லவரைப் பெற்றால், ஏவலைக் கேட்டு நடக்கும் உலகவரைக் காண்பதற்கு, இந்நிகழ்வே சீரிய எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. - அண்ணா சொல்லேர் உழவராக வாழ்நாள் முழுவதும் விளங்கியதை அவருடைய நாநலம் நமக்கு விளக்குகிறது. திராவிட இனத்தின் தோற்றத்தை, தமிழ்மொழியின் பண்பை - நானிலத்திற்கு அறியச் செய்தது, அவர் நாநலம்!
கடலனைய அவர் சொற்பொழிவில், கடுகளவே இந்நூலில் காட்டப்பட்டுள்ளது. கட்டுரை, மேடையுரை, வானொலியுரை, வழக்கு மன்ற உரை, அவை உரை, நேர்காணல் உரை சிலவே உங்களைக் கேட்கச் செய்துள்ளோம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.