சமநீதிக் குறளும் சணாதனக் கீதையும்
பேராசிரியர் அ.கருணானந்தன்
கோவையில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர். கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை வரலாறு(1964). சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை வரலாறு (1966). 36 ஆண்டுகள் கல்லூரிகளில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றிய பின் 2002இல் சென்னை விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறை தலைவராக பணி நிறைவு பெற்றார்.
சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் (1989-92); வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் (2006-09); தமிழ்நாடு வரலாற்றுப் பேரவைத் தலைவர் (2017-18).
300க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், ஒன்பது நூல்களின் எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் (1) பெரியாரியல், (2) புத்தவியல் மற்றும் (3)திராவிடவியல் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிறுவியுள்ளார். இவரது முயற்சியிலும் இவரது நண்பர் திரு ஈ.வி. வாசவன் அவர்களது பொருளுதவியிலும் "நாராயண குரு அறக்கட்டளைக் கருத்தரங்கம்" ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு சென்னை இலயோலா கல்லூரி வரலாற்று ஆய்வு மன்றத்தால் "வாழ்நாள் சாதனையாளர் விருது”ம், 2020இல் திராவிடர் கழக பண்பாட்டு மய்யத்தால் "பெரியார் விருதும் அளிக்கப் பெற்றார். இந்திய வரலாற்றுத் திரிபுகள், திராவிடர்-தமிழர் வரலாற்று உண்மைகள், சமூகநீதிப் போராட்ட வரலாறு, புத்தவியல், பெரியாரியல், பார்ப்பனீய மோசடிகள், மக்கள் கல்விப் பிரச்சினைகள் போன்றவற்றைக் குறித்து தொடர்ந்து மாணவர்-இளைஞர்களிடையே உரையாற்றி வருகின்றார்.