பின்நவீனத்துவம்
பின்நவீனத்துவம்
சமீப ஆண்டுகளில் பின்நவீனத்துவம் பற்றி தமிழில் பல நூல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில நூல்கள் பின்நவீனத்துவ கோட்பாட்டை விளக்குவதாகவும்,சில அக்கருத்துக்களை ஆதரித்தும், சில நூல்கள் அதனை ஏற்காது விமரிசித்தும் அமைந்துள்ளன.பின்தவீனத்துவத்தை ஒரு கோட்பாடாகவும்,தத்துவமாகவும் ஏற்க முடியாதென்றும், வர்க்கங்களாக அமைந்துள்ள சமூகத்தில் அது எந்த வர்க்கத்தின் சார்பானது என்ற கேள்வியோடும் இன்றும் விவாதப் பொருளாகவே பின் நவீனத்துவக் கோட்பாடு அமைந்துள்ளது. தன் முன்னுள்ள அனைத்தையும் கேள்வி கேட்பதும் கட்டுடைப்பதுமே பின் நவீனத்துவத்தின் நோக்கம் என்றும் தன்னை ஒரு தத்துவமாக அது அறிவித்துக் கொள்ளவில்லையென்றும் பின்நவீனத்துவ ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான விவாதங்களில் பங்கு பெறும் மேலும் ஒரு சிறு நூலாக மட்ஸ் அல்வெசன் எழுதிய தின்நவீனத்துவம் என்ற நூல் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.