பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
தனி மனித வெறுப்பு காரணமாக பெரியார் பார்ப்பனீயத்தை எதிர்க்கவில்லை. சொந்த லாபங்களுக்காகவும் அக்கொள்கையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சமதர்மம், சம ஈவு, சம உடைமை, சம ஆட்சித்தன்மை, சமநோக்கு, சம நுகர்ச்சி என்ற இலட்சிய அடிப்படையிலேதான் அவர்தம் பார்ப்பன எதிர்ப்பு அமைந்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
‘நீங்கள் பார்ப்பன துவேஷியா?’ என்று ஒருவர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த பெரியாரிடம் கேள்வி கேட்டார்; அதற்குச் சட்டென்று பதில் அளித்த தந்தை பெரியார், “கொசுக்கடி தாங்கவில்லை என்பதற்காக கொசு வலை கட்டிக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறேன். அதற்காக நான் ‘கொசுத் துவேஷி’ என்றா கூறுவது? மூட்டைப் பூச்சுக் கடி தாங்கவில்லை என்பதால், மூட்டைப் பூச்சி மருந்து இட்டு அதை அழிக்கின்றோம். அதனால் நான் மூட்டைப் பூச்சித் துவேஷி என்றா அழைப்பது?” என்று கேட்டார்.
அவர்தான் இதற்குப் பதில் அளிக்க முடியும்!
இந்த வெளிச்சம் கேள்வி கேட்டவரின் அறியாமை இருட்டைப் போக்கிற்றே!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.