பெண்ணுரிமையும் மதமும்
Original price
Rs. 45.00
-
Original price
Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00
-
Rs. 45.00
Current price
Rs. 45.00
மணம்
ஓர் ஆடவனும், ஒரு பெண்ணும் இவ்வுலக வாழ்க்கையில் ஒற்றுமையோடும், ஒருவருக்கொருவர் உதவி செய்து, சமத்துவமாய் வாழ இருவரும் மன ஒருமையுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தமே திருமணம் என்று வழங்கப்படுகிறது. இத்திருமண விஷயத்தில் பெரிதும் ஆண் மகனுடைய உரிமைதான் கவனிக்கப்படுகிறதே தவிர, பெண் மக்கள் உரிமை கவனிக்கப் படவில்லை என்பது மட்டுமல்ல, அப்பெண்டிர் உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டு, முன்பின் அறியா ஓர் ஆண்மகனுக்கு அடிமைப் படுத்தப்படுகிறாள் என்று தான் கூறவேண்டும். பண்டைக் காலத்திலே சைவர்கள் - இல்லை தமிழர்கள் திருமண விஷயத்தில் மகளிருக்கு சமத்துவமான உரிமையை நல்கியிருந்தனர் என்று தமிழ் நாட்டறிஞர்கள் பலர் சாற்றுகிறார்கள்.