படைவீடு
இன்றைய சமூக சீர்கேட்டுக்கெல்லாம் எதோ ஓர் இடத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்க வேண்டும். இந்த நாவல் அதைத் தேடிய பயணம்தான். 14 ஆம் நூற்றாண்டில் தமிழ் பேரரசுக்கு சமயம், பண்பாடு இரண்டிலும் ஒரு நெருக்குதல் ஏற்பட்டது. மதுரையை ஆண்ட சுல்தானியர்களும் விஜயநகரத்தை ஆண்ட ஹரிகர புக்கர் அரசும் உண்டாக்கிய நெருக்கடியின் வலி இன்றும் தொடர்கிறது. விமர்சனக் களம் கொண்ட இந்த நாவலும் விமர்சனத்துக்குத் தப்பாது என்பது கண்கூடு. சமயம், சாதி தொடர்பான பல கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியாகவும் இந்த நாவலைப் படைத்திருக்கிறார் தமிழ்மகன்.
சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் நீண்ட நெடிய ஆட்சி பதிமூன்றாம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது. பதினான்காம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த ஒரே தமிழ் பேரரசு சம்புவராயர்களுடையது. ஒரு பக்கம் சுல்தானியர்கள், மறுபக்கம் விஜயநகரப் பேரரசு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.