நாம் திராவிடர்
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்பது இன்றைய சமுதாயக் கட்டமைப்பினை முழுமையாக மாற்றி சாதி சமய மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்குவதுதான் என்பதை அழுத்தமாக தமது இலக்கியப் படைப்புகளைப் படைத்தனர். இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் மீண்டும் எழுச்சி பெற வேண்டும். இந்துத்துவம் மேலோங்கி வளர்ந்து வரும் இத் தருணத்தில் திராவிட இயக்கம் தமது கருத்தியலையும், செயல்பாடுகளையும் தீவிரப்படுத்திக் கொள்வது அவசியமாகும். தமிழகத்தில் சாதி அமைப்புகள் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றன. பல்வேறு கடவுள் வழிபாடுகள் தோன்றிய வண்ணம் உள்ளன. இத்தகைய சூழலில் திராவிட இயக்கத்தின் தேவை காலத்தின் கட்டாயமாகிறது. மனித உரிமைகள் எந்த வகையில் பாதிக்கப்பட்டாலும் அதனைக் களைய வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தவர். மனித மாண்பையும், மனிதத்துக்குள் சமனியத்தை நிறுவுவதை இலக்காகக் கொண்ட உலகு தழுவிய அறிவியல் தன்மதிப்புக் கோட்பாட்டாளரான தந்தை பெரியாரின் சிந்தனைகள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு நடுநிலையான ஒரு ஆய்வாக இந்த நூல் வெளி வருகிறது. தந்தை பெரியாரின் சிந்தனைகள் குறித்த தேடலுக்கும், தேடியப் பயன்பாடுகளைக் கணிப்பதற்கும் தேவை இருக்கிறது என்பதின் அடிப்படையில் உருவானதுதான் இந்த நூல்.
--புத்தகத்திலிருந்து நூலினைப் பற்றிய அறிமுகம்
தொடர்புடைய பதிவுகள்:
நாம் திராவிடர் - திராவிடப் பேரிகை: கல்விப்புலத்தில் உரத்த ஒலி
நாம் திராவிடர் - நூல் அறிமுகம்
நாம் திராவிடர் - நூல் முன்னுரை