Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் IS MORE DANGEROUOS

Original price Rs. 99.00 - Original price Rs. 99.00
Original price
Rs. 99.00
Rs. 99.00 - Rs. 99.00
Current price Rs. 99.00
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் is more Dangerous than Karunanidhi" என்ற கூற்றே வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் இந்தியத் துணைக் கண்டத்தின் மக்களாட்சி மாண்பை, அரசியல் அமைப்பு வழங்கியுள்ள மாநிலங்களின் தன்னாட்சி உரிமைகளை, போற்றத்தக்க இந்திய ஒன்றியத்தின் பன்மைத்துவத்தை, தனித்துவமிக்க அதன் பண்பாட்டுக் கூறுகளை, அதனை சீர்மைப்படுத்தும் மொழியை சிதைக்க நினைக்கும் சனாதன சக்திகளிடம் இருந்து நொடிப்பொழுதும் சோர்வுறாமல் அரை நூற்றாண்டு காலம் காத்து வந்த தலைவர் கலைஞர் எப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்தவர் என்பதையும், அதிலிருந்து சற்றும் தளர்வில்லாது இன்று இந்தியத் துணைக் கண்டத்தின் ஒப்பற்ற முதல்வராக விளங்கும் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்பை விட உறுதியாக அதைத் தொடர்வதையும்தான் உணர்த்துகிறது.

இந்திய ஒன்றியத்தில் எந்நாளும் பின்பற்றத்தக்க பேராளுமையான முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுவதாக பொய்ப் பரப்புரை செய்தவர்களேதான் இன்று தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு "M.K.Stalin is more Dangerous than Karunanidhir" என்று பேசத் துவங்கியிருக்கிறார்கள்.

கடந்த 2021 ஜூன் மாதம் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தின்போது பேசிய முதல்வர் அவர்கள் "நீதிக் கட்சி 17 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. முதன்முதலில் சமூக நீதிக்கான ஆணைகளை வழங்கி, வடமொழி ஆதிக்கத்தைத் தகர்த்து, மகளிருக்கு பிரதிநிதித்துவம் தந்து, கல்வித் துறையில் சீர்திருத்தங்களைப் புகுத்திய கட்சி அது. குறைவான அதிகாரங்களை வைத்துக் கொண்டு தொலைநோக்குத் திட்டங்களையும், சீர்திருத்தங்களையும் நிறைவேற்றிய கட்சி அது. நீதிக் கட்சி ஆட்சியில் அமர்ந்து 100 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தத் தருணத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.