முரசொலியின் மடியில் தவழ்ந்தவை
முரசொலியின் மடியில் தவழ்ந்தவை
சகோதரர் சிவாவின் பேச்சாற்றல், அவரது சிந்தனைத் தெளிவின் வெளிப்பாடு.
இவை அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அவரது எழுத்தாற்றல், படிக்கும்போது வியக்க வைக்கிறது! 1980 – 90களில் அவர் எழுதிய கட்டுரைகளை இன்று படிக்கத் தொடங்கினால் பிரமிப்பை உருவாக்கும் நடை! இடையிலே தடைபட்டுள்ள அவரது எழுத்து தொடரட்டும்! அன்று முரசொலியின் மடியில் தவழ்ந்தவை இன்று கழகம் காக்க முரசொலியின் கையில் பளிச்சிடும் போர்வாளாக மாறட்டும்!
முரசொலி செல்வம்
அண்ணன் திருச்சி சிவா அவர்கள் ‘முரசொலி நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழினத்தின் முகவரியாகத் தொடங்கப்பட்டதுதான் ‘முரசொலி’, அப்படிப்பட்ட பெருமைவாய்ந்த “முரசொலி’யில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் காலத்தின் கல்வெட்டுகளாக விளங்குகின்றன. அண்ணன் திருச்சி சிவா அவர்களின் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகப் படிக்கும்போது நம் கழக வரலாற்று நிகழ்வுகளையும் கால வரிசையில் தெரிந்துகொள்கிறோம். ஏனெனில், இவை வெறும் கட்டுரைகள் அல்ல; வரலாற்று ஆவணங்கள்!
மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சர்
திருச்சி சிவா அவர்கள் வடித்துத் தந்துள்ள ‘முரசொலியின் மடியில் தவழ்ந்தவை என்ற இந்நூல். முரசொலிப் பூங்காவில் பூத்த வாடாத வாச மலர்களாய் மணம் வீசுகின்றன. சிறந்த சொற்பொழிவாளரான சகோதரர் திருச்சி சிவா, எழுத்துத் துறையிலும் முத்திரை பதித்து இமயமாய் உயர்ந்து நிற்பது கண்டு பெருமிதம் கொள்கிறேன்.
வைகோ எம்.பி. பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
அண்ணன் திரு. திருச்சி சிவா அவர்கள் ஒரு சிந்தனையாளர். அதனால் அவர் பேச்சாளர். பேசுவதை எழுத்தாக வடிக்கும் வல்லமை கொண்ட எழுத்தாளர். அரசியல் மட்டுமின்றி வரலாற்றில், சமூகவியலில் பரந்துபட்ட அறிவைப் பெற்ற ஆய்வாளர். அவர் முறசொலியில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து மொத்தமாக ஒரு புத்தகமாக வழங்கி அதனை நான் படிக்க நேர்ந்தபோது அவரை நான் இன்னும் பிரமித்துப் பார்க்கிறேன். மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்நூல் வாராது வந்த மாமணி.
ஆ.இராசா எம்.பி. துணைப் பொதுச்செயலாளர். திராவிட முன்னேற்றக் கழகம்.