கலைஞர் வாழ்வில் சில சுவையான நிகழ்வுகள்
கலைஞர் வாழ்க்கை என்பது மிகப் பெரிய கடல். சிறியவர்களுக்கு கலைஞர் வாழ்வை அடையாளம் காட்டும் நோக்கோடு 'சிறுவர் களுக்கான கலைஞர் வாழ்க்கை ' என்று ஒருசிறிய நூலை எழுதினேன்.
தற்போது இந்த நான்காவது நூல். கலைஞரின் வாழ்வை அரசியல் கடந்து... கட்சி மோதல் மறந்து... தமிழ் எல்லாம் அறிந்து போற்றிட இது துணை செய்யும்.
கலைஞர் வாழ்வென்னும் ஆழ்கடலில் தேடியசில ஆபூர்வ முத்துக்களாய் சில சம்பவங்கள் - நிகழ்வுகள் என எடுத்து... இந் நூலை எழுதுகிறேன்.
இது முன்னேற்றத்துக்கும் இளைஞர்க்கும் வழிகாட்டும் நூலாகவும், தடைகளைத் தாண்டும்
பாலமாகவும், உயர நினைப்போர்க்கு ஏணியாகவும் உதவிடும்.
- இனிய அன்பில்,
கமலா கந்தசாமி
இது கலைஞரின் வாழ்க்கை வரலாறல்ல, கால வரிசைப்படி எழுதப்பட்டது அல்ல... கண்ட... கேட்ட - படித்த - பல சுவையான கலைஞர் வாழ்வியல் சம்பவத் தொகுப்பே இந்த சிறுசிறு சம்பவங்கள் ரசிக்கத்தக்கவை மட்டுமல்ல! நமக்கு பாடமாகும், வேதமாகும், போக்கிஷமான நினைவுகள் கூட, பாராட்டப்படக் கூடிய முன்னுதாரண சாதனையும் சரித்திரமும் சில சொற்களில் இடம் பெறும். கலைஞர் வாழ்வு எனும் ஆழ்கடலில் சேகரித்த சில அற்புத முத்துக்கள் இவை. கலைஞருக்குள் இத்தனைக் கலைஞரா என்று அவர் பன்முகம் காட்டும் கண்ணாடி இது... ஓ! எத்தனைத் தடைகள் இவர் தாண்டி வந்தபாதை என நம்மை வியக்க வைக்கும் உணர்ச்சித் தொகுப்பு இது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.