கலைஞரின் மனம் கவர்ந்த சில மாமனிதர்கள்!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கலைஞர் மனதை மிகவும் கவர்ந்தே இருக்கின்றனர்...
வான்புகழ் வள்ளுவள். தேன் புகழ் இளங்கோ ... யாதும் ஊரே பாடிய கணியன்...
இப்படி, இலக்கியத்தில் எத்தனையோ பேர் கலைஞர் இதயம் கவர்ந்த வர்கள்...
துருக்கி கமால்பாட்சா... ருஷ்ய ஸ்டாலின் இப்படி எண்ணற்ற தலைவர்கள் கலைஞர் மனம் கவர்ந்தார்கள்!
தேசத்திற்கு சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மா... நேரு... இந்திரா.... ராஜீவ்...
- இப்படிப் பல தலைவர்கள் அதில் உண்டு. ஆளுநர்கள் என வந்து மனதில் இடம் பிடித்தவர் சிலர் உண்டு.
திரு.வி.க... மு.வ. மறைமலையடிகள்... உ.வே.சா என நீண்ட தமிழ் அறிஞர்கள் பட்டியல் நீளும்! வேண்டாம். அவர்கள் இந்த நூலில் வேண்டாம். 1924-ல் பிறந்து... திருவாரூர் வந்து... அரசியல் - கலை... நாடகம் - சினிமா.... எழுத்து என 1934 முதல்... இந்த 2010 வரை... அவர் வாழ்வோடு பின்னிப் பிணைந்து... மின்னிச் சிறக்கும் சிலர் போதுமே....
இந்த எண்ணத்தில்தான் எழுதிடத் துணிந்தேன். எழுதுகிறேன்.
விடுபட்டவர்கள் இருக்கலாம். ஆனால், நான் குறிப்பிடும் சிலர்.
நிச்சயம் கலைஞரின் மனம் கவர்ந்தவர்களே... தொண்டர்கள்... உடன்பிறப்புகள்... சிறை நண்பர்கள் கலை நண்பர்கள். தனக்காக தீக்குளித்து உயிர் நீத்தோர்... பால்ய நண்பர்கள் எனப் பலர் இருப்பதால்தான்.....
எச்சரிக்கையாக... இந்த நிலையில் இந்நூலுக்கு 'கலைஞரின் மனம் கவர்ந்த சில மாமனிதர்கள்.' எனத் தலைப்பிட்டேன்.
- இனிய அன்பில்,
கமலா கந்தசாமி
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.