சிவாஜி முடிசூட்டலும் பார்ப்பனீயமும்!
'கலியுகத்தில் பார்ப்பனர் மட்டுமே இரு பிறப்பாளர்' என்று பார்ப்பனப் பண்டிதர்கள் அறிவித்ததைக் கேட்ட சிவாஜி. தனக்கு அவமானம், இழைக்கப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்துகொண்டான் என்று தெரிகின்றது, அவர்கள் சொற்படியே அவர்களை நடத்துவதென்றும், தற்காலத்தில் பார்ப்பனர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறதுஎன்பதையும் அவர்களுக்குச் சொல்ல விரும்பினான். "தாரிக்-இ-சிவாஜி, 39அ' என்னும் பெர்சிய மொழிக் கையெழுத்துப் படிநூல் இவ்வாறு கூறுகிறது:"வேத மந்திரங்களை ஒதுவதற்குப் பார்ப்பனர்கள் மறுக்கிறார்கள் என்பதைக் கேள்வியுற்ற மன்னர் (சிவாஜி). 'பார்ப்பனர்கள் மதிப்பிற்குரியவர்கள்: - அவர்களை அரசுப் பணியாளர்களாக அமர்த்துவது முறையற்ற செயல்: கடவுள் வழிபாடு செய்வதைத் தவிர வேறு எந்த வேலையையும் அவர்கள் செய்யக் கூடாது: ஆதலின் அரசுப் பணியிலிருந்த பார்ப்பனர் அனைவரையும் பணியிலிருந்து நீக்கிவிட்டு 'பிரபுகாயஸ்தாஸ்" L.மக்களைப் பார்ப்பனர் இருந்து இடங்களில் நியமித்தான்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.