Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ரோமாபுரி ராணிகள்

Sold out
Original price Rs. 0
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Current price Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

உலகில் தமிழகத்தைப் போன்று பழமையான நாகரிகம் வாய்ந்த நாடு ரோம். உயர்ந்த நாகரிகமும் பண்பாடும் செல்வமும் வீரமும் கலைகளும் மற்ற நாடுகள் பொறாமை கொள்ளும் அளவிற்கு ரோம் நாட்டில் சிறந்து விளங்கின என்று வரலாறு கூறுகிறது. 15-10-1764 இல் கிப்பன் என்ற அறிஞர் ரோமின் அழிவு சின்னங்களைக் கண்டபோது அவர் மனம் ரோம் பேரரசின் வாழ்வும் வீழ்ச்சியும் பற்றி எழுதிட எண்ணிறாம். சிதைந்து கிடந்த கலைக் சின்னங்கள், சிதைந்து அழிந்து போன ரோம் பேரரசு பற்றி எழுதிடத் தூண்டியுள்ளது கிப்பனை. அது போன்றே, பேரறிஞர் அண்ணா கிப்பனின் வரலாற்று நூல்களையும் ரோம் பற்றிய அறிஞர்கள் பலரின் கருத்துக்களையும் படித்தபோது உலகில் வீரம், கொடை, அன்பு, கல்வி, கலை, தொழில், செல்வம், மன்னராட்சியில் மக்களாட்சி என்னும் பலவற்றிலும் ஒப்பற்று உயர்ந்து விளங்கிய ரோம் பேரரசு ஏன் விழுந்தது என்பது பற்றி எண்ணிடலானார். மேலும் பல நூல்களை கற்றிடலானார். விளைவு, ‘ரோமாபுரி ராணிகள்’ என்ற பெயரில் ‘திராவிட நாடு’ இதழில் 1942-இல் தொடர்கட்டுரைகளாக வெளிவந்தன. ஏடு படித்த எல்லோரும் வியந்து வியந்து படித்து விழுந்துபோன ரோமின் பெருமைகளையெல்லாம் தனிமனிதர் விருப்பும் வெறியும் அழித்து ஒழித்து உள்ளனவே என்று கலங்கிடலாயினர். அரசியல் காழ்ப்புடன் ஒரு கூட்டத்தினர் நூலின் நோக்கத்தினைபப் போற்றிடாது உணர்ந்திடாது தூற்றிடவும் செய்தனர்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பேரறிஞர் அண்ணா
பக்கங்கள் 128
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 2015
அட்டை காகித அட்டை