மார்சியப் பார்வையில் அம்பேத்கர்
அம்பேத்கருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே'நிலவிய முரணும் நட்பும் பற்றி ஆராய்கிறது. தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்பது சாதிய அமைப்பு உருவாக்கியிருந்த தடைகளை வலிமையிழக்கச் ' செய்வதை அவர் ஏன் பார்க்கத் தவறினார்? | இக்கேள்விகள் கம்யூனிஸ்ட்டுகள் சாதியம் பற்றி |அன்று கொண்டிருந்த கோட்பாட்டு ரீதியான நிலைபாட்டை பரிசீலிக்கத் தூண்டுகின்றன. தலித் மக்களின் விடுதலைக்காக பிரத்யேகமான முயற்சிகள்தேவையில்லை, வர்க்கப் போராட்டத்தின் வீச்சில் 'சாதியம் அழியும் என்கிற யாந்திரீகமான பார்வை அன்று கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு இருந்ததையும் தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்பதை தலித் ஒற்றுமை என்பதை சீர்குலைக்கும் முயற்சியாக அம்பேத்கர் காண நேர்ந்ததையும் இப்புத்தகம் விளக்குகிறது. மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஒரு 'பிரிக்கமுடியாத பகுதியாக சாதிய ஒடுக்குமுறைக்குஎதிரான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என இந்நூல் வலியுறுத்துகிறது