"சுயமரியாதை இயக்கக் கருத்தியல் களஞ்சியம்" சாமி கைவல்யம்
"யாரடா சூத்திரன்?”
15, 20 ஆண்டுகளுக்கு முன், ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் (பெரியாரும் கைவல்யமும்) சென்றிருக்கும்போது. சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறின பார்ப்பனன் ஒருவனைத் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கும்போது, அவன் நம்மிடம் கீழே இருந்த டம்ளரைக் கையில் எடுத்தான். உடனே பக்கத்திலிருந்த மற்றொரு பார்ப்பனச் சமையல்காரன் அந்தப் பார்ப்பானைப் பார்த்து, "என்னடா மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைக் கையில் தொட்டு எடுத்து விட்டாய்” என்று கோபமாகப் பேசினான். உடனே, கைவல்ய சுவாமியார் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் எழுந்து, எச்சில் கையாலேயே அந்தப் பார்ப்பனனை ஓர் அறை செவுளில் அறைந்து. 'யாரடா சூத்திரன்?” என்று கேட்டார். அப்போது ஒரு சிறு கலகமாகி பிறகு, அந்தப் பார்ப்பனன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
- தந்தை பெரியார் (1931இல் எழுதியது)
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.