1965-ல் மாணவர் கொட்டிய போர் முரசு
1965 இல் அரசின் இந்த அத்துமீறலை எதிர்த்துத் தமிழ்நாட்டில் இந்தி ஆட்சிமொழி ஆவதைத் தடுத்து அறிவார்ந்த மக்களும் மாணவர்களும் போர்முரசு முழக்கிப் போராட்டத்தில் குதித்தனர். ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற செய்த உயிர்த்தியாகத்தைவிட கொடுமையாக நடந்து கொண்ட சொந்த இந்திய அரசுக்கு எதிராக, இந்தி ஆட்சிமொழி ஆணைக் கெதிராகப் பல போராட்டங்கள் நடைபெற்றனர். பலர் உயிர்களைத் தியாகம் செய்தனர். 1965 இல் தமிழைக் காக்க தமிழ்மாணவர்கள் ஒன்று கூடிகளம் கண்டு கொட்டிய முழக்கங்களே “போர் முரசு” என்னும் இந்நூலாக மலர்ந்துள்ளது. படிக்கப்படிக்கக் கண்ணீரைச் சொட்டவைக்கின்றது. அரசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.பல உயிர்கள் விலையாகக் காவு கொடுக்கப்படுகின்றன. அந்த வீரவலாற்றை விளக்குவதுதான் இந்த நூல்.
உணர்ச்சி ததும்பும் சீரிய நடையில் பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் அருமையாகத் தொகுத்தும் வகுத்தும் சீர்மைப்படுத்தித் தந்துள்ளார். நமது மொழிப்போர் தியாகிகளின் வீரவரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? நூலைப்படியுங்கள்.