தமிழுக்கு என்ன செய்தார் கால்டுவெல்
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
கால்டுவெல் வெறும் மத போதகர் மட்டும் அல்ல. அவர் ஒரு மிகச் சிறந்த தமிழறிஞர். தமிழுக்கு அவர் செய்த பணி எவ்வளவு உயர்வானது, எவ்வளவு ஆய்வு பூர்வமானது, தமிழ் இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு என்னவென்று பல்வேறு விதமான கருத்துக்களை ஆய்வு நோக்கோடு இந்த மூன்று பேராசிரியர்களும் அணுகி உள்ளனர்.
கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் தமிழுக்கு அவர் செய்த மிகப் பெரும்
கொடை, முதலை வாயில் சிக்கிய மான் மயிரிழையில் தப்பியது போல் சமஸ்கிருதம் என்ற முதலையின் வாயில் சிக்கி தமிழ்மொழி குற்றுயிராக இருந்தது. அதை கால்டுவெல் தனது ஒப்பிலக்கணம் நூலின் மூலம் மீட்டுக் கொடுத்தார்.
கால்டுவெல் திராவிட ஒப்பிலக்கணம் என்ற சொல்லை அறிமுகப் படுத்திய பின்பே திராவிடம் எனும் சொல் பார்ப்பனரல்லாத அரசியலுக்கு தொடக்கம் முதலே வழிவகுத்தது. பின்னர் தமிழ்நாட்டில் அரசியல், கலாச்சாரப் பண்பாட்டையே மாற்றக்கூடிய அளவுக்கு திராவிடம் எங்கும் ஆதிக்கம் பெற்றுள்ளது. இன்று மொழிக் குடும்பத்தை திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்வதோடு, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை திராவிட மாடல் என்று அழைக்கிறோம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.