பயணம் - மூன்றாம் பாகம் (கட்டுப்பாடு)
இப்புதினத்தின் முதன்மைப் பாத்திரம் பள்ளர் வகுப்பைச் சார்ந்த செல்லத்துரையன் என்ற இளைஞனின் பாத்திரமே. கல்வியறிவு மறுக்கப்பட்டு தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி அதை விற்றுப்பிழைப்பதே இவனது தொழில்.குரும்பையூர் அரசமரத்தடி எட்டாம் நாள் திருவிழாவில் நடக்கும் கூத்தை காண வந்த போது நிகழ்ந்த ஒரு நிகழ்வு இக்கதையில் முக்கிய இடத்தைப்பெருகிறது. இராமனின் மகன் நல்லான் என்ற இளைஞன் தூக்கத்தில் பஞ்சமர்களை பிரிக்கும் கயிரைத்தாண்டி வெள்ளாளப் பெண்கள் பகுதிக்கு தூக்கக் கலக்கத்தில் சென்று விடுவது வெள்ளாள இளைஞர்களை வெறியேற்றி விடுகிறது. நல்லான் நையப்புடைக்கப்படுகிறான். இதைத் தடுக்க முயன்ற செல்லத்துரையனும் தாக்கப்படுகிறான். “பள்ளருக்கு கட்டிற கயிரெல்லாம் அறுத்தெறிவன்” என்ற செல்லத்துரையனின் சொற்கள் வெள்ளாளர்களின் கடும் எதிர்ப்புக்கு அவனை ஆளாக்கின. நையப்புடைக்கப்பட்ட நல்லான் பக்கத்து ஊர் அரசாங்க மருத்துவ மனைக்கு கொண்டுபோய் சிகிச்சை அளித்தால் பிழைத்திருப்பான் இந்த புத்தகத்தின் கதை.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.