நீலச்சட்டைக் கலைஞர்
கலைஞர் ஓர் எதிர்க்கட்சித் தலைவராக நின்று 'சாதியத்தை எதிர்கொள்ளும்' நேர்வை எழுதியும் பேசியும் சட்டமன்றத்தில் கவனம் ஈர்த்தும் வந்தார். அதில் முதன்மையான நற்கூறு விஞ்ஞானப்பூர்வமான தலித்தியமாகிய அம்பேத்கரியத்தைத் துணைக்கொண்டு அவர் கருத்தியல் களப்போர் புரிந்தமைதான், அதுதான் சிறப்பு.
அசட்டுத்தனமான அடித்தட்டு அபிமான வெளிப்பாடுகளான காந்தீயம், பாரதீயம் சார்ந்து கருத்துகளை வெளிப்படுத்தாமல் சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்கொள்வதில் திராவிட இயக்க நோக்குநிலையில் நின்றும், தமிழ்நாட்டின் முந்தைய ஆட்சியியல் வரலாற்று அனுபவங்களை (காமராசர் முதுகுளத்தூர், அண்ணா - கீழ்வெண்மணி) இயங்கியல் போக்கில் இணைத்துக்கொண்டும். தன் சொந்த நுண்ணறிவோடும் சமகாலச் சமூக நிலையைக் கூர்மையாக விளக்கியுரைத்தார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.