நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?
நவீன உலகத்தில் மனிதன் எதையாவது கண்டு பயப்படுகிறான் என்றால் அது தன்னைப் பற்றித்தான். அல்லது தன்னுடைய இருப்பு மற்றும் மனநிலையை குறித்துத்தான் அவன் அஞ்சுகிறான். எல்லா மனிதர்களும் உடலளவிலோ மனதளவிலோ தங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று உணர்ந்துகொண்டே இருப்பதுதான் நவீன வாழ்க்கைமுறையின் சாரமாக இருக்கிறது. உண்மையில் நம்முடைய பிரச்சினைகள்தான் என்ன? மனிதர்களின் உண்மையான இயல்பு என்பது என்ன? இதற்குச் சட்டங்கள் அளிக்கும் வரையறை ஒன்றாகவும் மதம் அளிக்கும் வரையறை ஒன்றாகவும் அறிவியல் கோட்பாடுகள் அளிக்கும் வரையறை ஒன்றாகவும் இருக்கிறது. ஆனால் இந்த வரையறைகளுக்கிடையே நடக்கக்கூடிய மோதல்களும் பிறழ்வுகளும் மனிதர்களை இயல்பற்றவர்களாக உருமாற்றிவிடுகின்றன. மனிதர்கள் எதிர்கொள்ளும் இந்த உளவியல் நெருக்கடிகள் பற்றி ஆழமான பார்வைகளை டாக்டர் சிவபாலன் இளங்கோவன் இந்த நூலில் முன்வைக்கிறார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.