மாமேதை லெனின்
தலைவர்கள் சமுதாயத்தை உருவாக்குவதில்லை. மாறாக சமுதாயம் தலைவரை உருவாக்குகிறது என்பார் கார்ல் மார்க்ஸ். சூழ்நிலையும் தேவையுமே சமுதாயத்திலிருந்து தலைவனை விழித்தெழச் செய்கிறது.
இரண்டாம் உலகப்போரின் போது மிகவும் சிதைவடைந்த ருசியாவை மார்க்ஸ், ஏங்கல்ஸ் வழியைத் தொடர்ந்து மாமேதை லெனின் உழைப்பினாலும் இடைவிடா முயற்சியாலும் வெற்றிபெறச் செய்தவர் லெனின். சோம்பல் தன்மையும் அடிமைக் குணமும் கொண்டு இருளில் மூழ்கிக் கிடந்த மக்களைத் தட்டியெழுப்பிச் சிந்திக்க வைத்தார். உழைப்பின் பண்ணையாக நாட்டை உருவாக்கினார். உலகமே வியக்கும் வண்ணம் ருசிய நாட்டை முதல்தர நாடாக உருவாக்கினார். பொதுவுடைமைச் சிந்தனைகளின் பூந்தோட்டமாக்கினார்.
ஆழ்ந்த அறிவும், ஆர்வமும் அதே நேரத்தில் புரட்சி மனப்பான்மையும் கொண்ட புதிய தலைவராக, துணிவும் ஊக்கமும் கொண்ட உன்னத மனிதராகத் திகழ்ந்த மாமேதை லெனினின் வாழ்க்கை வரலாற்றை முறையாகத் தொகுத்து அனைவர்க்கும் வழிகாட்டும் வகையில் எளிய நடையில் தெளிவான சிந்தனைகளுடன் திரு. பட்டத்திமைந்தன் அவர்கள் ஆக்கியுள்ளார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.