Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்இரா.சுப்பிரமணி

Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

மெக்காலே என்னும் ஆங்கில அதிகாரியைக் கொண்டாடவேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் உருவாக்கப்படவில்லை. இந்திய தேசத்தின் கல்விவரலாறு என்பது விருப்புவெறுப்பற்ற நிலையில் வாசிக்கப்பட வேண்டும் என்பதனை எடுத்துரைக்கவே இந்நூல் வெளிவருகிறது. வரலாற்றில் வாதங்களை முன்வைக்கவும். விவாதங்களை நடத்தவும் சான்றாவணங்களே முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. பழம்பெருமைகளை எவ்விதச் சான்றுகளுமின்றித் தொடர்ந்து உரக்கப் பேசிவருவது மக்களை மீண்டும் அறியாமை இருளில் மூழ்கச்செய்யும். சான்றுகளற்ற 'தேசப்பற்று' முழக்கங்கள் அறிவின் வெளிச்சம் நோக்கி ஒருபோதும் முன்நகர்த்திச் செல்லாது. இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உலக அறிவை உட்செலுத்திக் கல்வியை முன்னெடுப்பதே நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

இந்தியாவின் கல்வி நிலையும். அறிவு நிலையும், கல்வியில் நிலவும் சமத்துவமும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் கல்வியால் உருவான மாற்றங்களும் உலக மக்களுடன் போட்டிபோடும் வண்ணம் உள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாகக் கல்வி கற்கும் உரிமையே மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகம் இந்த இருநூறு ஆண்டுகளில் எட்டியிருக்கும் வளர்ச்சி எங்ஙனம் சாத்தியமானது என்பதனை ஆய்ந்தறிவது அவசியமாகும். அது மெக்காலேவின் கல்வி முன்னெடுப்புகளால்தான் சாத்தியமானது என்ற வாதம் வலுவாக முன்வைக்கப்படுகிறது. இதில் எது உண்மை? என்பதனை ஆய்ந்தறிய வேண்டியது நமது கடமையாக உள்ளது. இந்திய கல்வி வரலாற்றின் முக்கிய நகர்வுகளைப் புரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் துணைநிற்கும்.

மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்,இரா.சுப்பிரமணி,சாளரம்,Macaulay Pazhamaivaathak Kalviyin Pagaivan,R.Subramani

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.