இஸ்லாமும் இந்தியர்களின் நிலையும்
சுமார் 76 ஆண்டுகளுக்கு முன் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய இஸ்லாமும் இந்தியர் நிலையும்" என்ற சிறு பிரசுரத்தின் மறு பதிப்பு இது.
மூவலூர் அம்மையாரின் வாழ்வும் பணியும் குறித்து தகவல்கள் சேகரிக்கும் போது கிடைத்த பொக்கிஷம் இச்சிறு புத்தகம். திராவிட இயக்கப் போராளியான அம்மையார் இச்சிறு பிரசுரம் எழுத வேண்டியதன் அவசியம் குறித்த பின்னோக்குப் பார்வையை மேற்கொண்ட போதுதான் இஸ்லாமிய மார்க்கம் குறித்த அதன் சமத்துவத் தன்மையையும் ஜனநாயக மாண்பு இவற்றை உணர முடிந்தது.
- பதிப்புரையிலிருந்து
சுயமரியாதை இயக்கம் என்பது பன்முகத்தன்மை கொண்ட போராட்டங்களின் தொகுப்பாகும், ஒரு பக்கம் பெண்விடுதலை என்றால் மறுபக்கம் சாதி இழிவிலிருந்து விடுதலை. இன்னொரு பக்கம் காங்கிரஸின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவது, நாளொரு பிரச்சினை, நாளொரு போராட்டம், சிறை என சுழன்று சுழன்று பணியாற்றினார்கள். எண்ணம், எழுத்து, செயல் என மூன்று வழிகளிலும் கடுமையான போராட்டங்கள். இதன் ஒரு அம்சம்தான் இஸ்லாம் மார்க்கத்தில் காணப்பட்ட சமத்துவ, பகுத்தறிவு மாண்புகளைக் கண்டு இந்து தீண்டாமைக்கு எதிராக, சாதி இழிவுக்கு எதிராக, சனாதன அரசியலுக்கு எதிரான மார்க்க அரசியலை முன்வைத்தனர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.