காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன்
நாம் வாழும் காலத்தின் மேல் பைசாசங்களின் நிழல்கள் விழுந்திருக்கின்றன. நாம் பேரழிவுகளின் சாட்சியங்களாக வெட்டவெளிகளில் நின்று கொண்டிருக்கிறோம். அச்சமும் இருளும் எங்கெங்கும் நம்மை ஆள்கின்றன. எளிய மனிதர்கள் அவர்களது வீழ்ச்சியின் அதலபாதாளங்களை நோக்கிச் செலுத்தப்படுகிறார்கள். அதிகாரத்தில் இரும்புக்கைகள் மேலும் மேலும் ரத்தவேட்கை கொண்டவையாகிக் கொண்டிருக்கின்றன. உண்மைகள் வதந்திகளாகவும், வதந்திகள் கடக்க முடியாத உண்மைகளாகவும் மாறியிருக்கின்றன. மனுஷ்ய புத்திரம் 2016ல் சமூக அரசியல்வெளி குறித்து எழுதிய கவிதைகள் இவை. குறிப்பாக அதிகாரத்தால் கட்டப்படும் ரகசிய புனைவு வலை, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரம் ஏற்படுத்திய சீரழிவுகள் பற்றி முக்கியமான எதிர்வினைகளை இக்கவிதைகள் ஆற்றுகின்றன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.