எண்ணித்துனிக கருமம்
இனி தி.மு.க.வை ஒழித்துக் கட்டாமல் விடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடமும் – தமிழகக் காங்கிரஸ் தலைவர்களும் கூடிப் பேசி; கொண்டு வந்தனர் ஒரு சட்டத்தை!
அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால்; தி. மு. கழகம் பிரிவினைக் கொள்கையைப் பேச முடியாது – பேசினால் கழகமே இருக்க முடியாது – இப்படி ஒரு சூழ்நிலையில், “சுவரா? சித்திரமா?” என்ற கேள்விக்கு விடை காண ஆழ்ந்த சிந்தனையில் கழகத்தினர் இருந்தபோது; அதுபற்றிய விவாதம் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துக் கொண்டிருந்தபோது – தி.மு. கழகத்தின் பொதுக்குழு 1963ம் ஆண்டு சூன் திங்கள் 8,9,10 நாட்களில் கூட்டப் பெற்றது.
அந்தப் பொதுக்குழுவில் இந்தச் சிக்கலான பிரச்னைக்குத் தீர்வு காண ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டுமென்று விரும்பிய அண்ணா அவர்கள், அக்குழுவில் அவர் பேச எண்ணியதை முன் கூட்டியே ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் தனது கைப்படவே எழுதி வைத்துக் கொண்டார். பொதுக்குழுவில் பேசும்போது பெரும்பகுதி; அவர் தன் கைப்பட எழுதி வைத்திருந்ததை அடிப்படையாக வைத்தே கருத்துகளை அள்ளிப் பொழிந்தார்.
திராவிட இயக்க வரலாற்றிலும் – தமிழக அரசியலிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்த அந்த பொதுக்குழுவில் அண்ணா பேசுவதற்காக அவரே எழுதித் தயாரித்த அந்த உரையை பொதுக்குழு முடிந்த பிறகு கலைஞரிடம் ஒப்படைத்தார்.
அண்ணாவின் அந்தக் கையெழுத்துப் பிரதியை நாற்பது ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்த கலைஞர் 2003ஆம் ணாடு அதனைப் பதிப்பித்தார்
அரசியல் வரலாற்றையே மாற்றிய அந்தப் பொதுக்குழுவின் முடிவையும் – அக்குழுவில் அண்ணா நிகழ்த்திய அற்புதமான விளக்க உரையையும் – படித்துணர ஒர் அருமையான வாய்ப்பு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.