டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும்
திரு.மு. நீலகண்டன் திருவள்ளூர் மாவட்டம், ஆவடிக்கு அருகில் பாலமேடு என்னும் சிற்றூரில் 1.7.1948-இல் முனுசாமி - பட்டம்மாள் இணையர்க்கு மூன்றாம் மகனாகப் பிறந்தவர். பாலவேடு ஆதிதிராவிடர் நலப்பள்ளியிலும், பாலவேடு ஊராட்சி நடுநிலைப் பள்ளியிலும் தொடக்க நடுநிலைக்கல்வி பயின்றார். சென்னை, ஜார்ஜ் டவுனில், டாக்டர் குருசாமி முதலியார் தொண்ட மண்டலம் துளுவ வேளாளர் பள்ளியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். சென்னை சர்.தியாகராயர் கல்லூரியில் PUC (கல்லூரி புதுமுக) வகுப்பு முடித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் B.A., Eco. (கலையியல் இளையர்) பொருளாதாரம்) / திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் M.A,. His. (கலையியல் முதியர் வரலாறு) / காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் M.Phil., (இளமுனைவர்) பட்டங்களைப் பெற்றார்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகள், கோட்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 33 வருடங்கள் பணியாற்றி, அரசு துணைச் செயலாளராக பணி நிறைவு பெற்றார். தன்னுடைய பணிக்காலத்தில் அரசு அலுவலர் நலச் சங்கங்கள், அரசுப் பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், சமூக நலச் சங்கங்கள் ஆகியவற்றில் பங்கு கொண்டு செயலாற்றியவர். தமிழ்நாடு எஸ்.சி. / எஸ்.டி. அலுவலர் நலச்சங்கத்தில் மாநில தலைமை நிலையச் செயலாளராகவும், மாநில பொதுச் செயலாளராகவும் செயலாற்றியவர். அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் வழிகாட்டியாக செயலாற்றுகிறார்.
மேலும் இந்நூல் ஆசிரியர் தமிழில் “டாக்டர் அம்பேத்கரின் பொருளாதார சிந்தனை வரலாறு” மற்றும் ஆங்கிலத்தில் “Short History of Dr.Ambedkar” என்ற புத்தகங்களை எழுதியுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் “சமுதாய ஆலோசனைகள் மையம்” என்ற அமைப்பின் செயலாளராக இருந்துகொண்டு மாணவர்களின் கல்வி, பொருளாதார தேவை, சமூக மேம்பாடு ஆகியவைகளை நெறிப்படுத்தி ஆலோசனை வழங்கி வருகிறார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.