தம்மம் தந்தவன்
புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம். ஆனால் மன்னரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் எல்லாவற்றையும் துறந்தது எப்படி? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்த நாவல் மிக அற்புதமாக விவரிக்கிறது. புத்தர் தனது இளமைக்காலத்தில் வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்டது, அரண்மனைக்குள் சிறை வைக்கப்பட்டவராக இருந்தது, அதையும் மீறி வெளியுலகைக் கண்டு தனது புரிதலுக்கேற்றபடி உலகை விளங்கிக் கொண்டது, புத்தர் துறவியாகிவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு அவர் தந்தை திருமணம் செய்து வைத்தது, ஒரு குழந்தை பிறந்ததும் இல்வாழ்வைத் துறந்துவிடுவேன் என்று திருமணம் ஆன புதிதில் புத்தர் தனது மனைவியிடம் கூறியது, ஆண் குழந்தை பிறந்தவுடன் இல்லறத்தை விட்டு விலகியது, எட்டு ஆண்டுகள் கழித்து திரும்பவும் கபிலவஸ்துவிற்கு வந்து பிச்சைப் பாத்திரத்துடன் நடந்து வந்தது, அரசனான புத்தரின் தந்தை கோபித்துக் கொண்டது, மனைவி யசோதரா புத்தரைக் கட்டித் தழுவியும் அவர் தன்னிலை மாறாதது என உணர்ச்சி பொங்க புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரிக்கும் இந்நாவல், புத்தரின் வாழ்வியல் சிந்தனைகளை வாசகர்களின் மனதில் விதைத்துவிடுகிறது. உயர்ந்த சிந்தனைகளை கவித்துவமான நடையில் பேசும் இந்த நாவல், ஒரு மொழிபெயர்ப்பு என்று தோன்றாதவிதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சிறப்பு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.