காங்கிரசும் பாரதிய ஜனதாவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள்
இந்தியாவில் தலைவிரித்தாடும் இருதலைப் பாசிசப் பாம்பான பா.ஜ.க, காங்கிரஸ் எதிரிகளை எதிர்த்து, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை ஆதரிப்போர் அனைவரையும் ஓர் அணியில் திரட்டுவதற்கான அரசியல் செயல்தந்திரப் பாதை என்கிற முறையில் `காங்கிரசும், பாரதிய ஜனதாவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள்`.எனும் நூல் மார்ச் 1993-இல் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினால் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இந்துத்துவ பாசிசம் தலைவிரித்தாடும் இன்றைய அரசியல் சூழலில், இந்நூலை தேவை கருதி புதுமை பதிப்பகம் வாசகர்களுக்குச் சமர்ப்பிக்கிறது.
காங்கிரஸ், பாரதிய ஜனதா என்னும் இரட்டைத் தலை பாசிசப் பாம்பை நசுக்குவதற்குப் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்களின் வழியின் சாராம்சத்தைப் பின்வருமாறு கூறலாம். மதச்சார்பற்ற அரசை உருவாக்கவும், மதம் தனி நபரது சொந்த விவகாரமாக ஆக்கிடவும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவிட மக்களை அணிதிரட்ட வேண்டும். பாசிசப் போக்கை முறியடிப்பதற்குக் காங்கிரஸ், பாரதிய ஜனதா எனும் இரட்டைத் தலைகளைக் கொண்ட இந்தியப் பாசிசப் பாம்பை நசுக்க வேண்டும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.