அரசியல் எனக்குப் பிடிக்கும்
ச.தமிழ்ச்செல்வன் விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் பிறந்தவர். மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் வயிற்றுப் பேரன். பட்டப்படிப்பை முடித்து இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இவர் அங்கிருந்து நேரடியாக அறிவொளி இயக்கத்தின் செயல்பாட்டாளராக புழுதிவிசும் தமிழகக் கிராமங்களில் கால்பதித்தார், 80களில் தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாளராக அறியப்பட்டார். மாற்றுக் கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்,அரசியலே சாக்கடை நல்லவர்கள் அரசியலில் ஈடுபடமாட்டார்கள்வசதியிருந்தால்தான் அரசியலில் ஈடுபட முடியும்அரசியலில் எல்லா அசிங்கங்களும் சகஜம் யாராலும் அரசியலை சுத்தப்படுத்த முடியாது. இது போன்ற வாதங்கள் எப்போதும் காற்றில் உலவுகின்றன. எதார்த்தம் போலவும், உண்மை போலவும் தோற்றம் தரும் இத்தகைய கருத்துக்கள் எங்கிருந்து பிறக்கின்றன இவை தற்செயலாக தோன்றிய கருத்துக்களான பெருவாரியான ஏழை, எளிய மக்களை அரசியலிலிருந்துவிலக்கி வைத்து அரசியல் அற்றவர்களாக மாற்றும் திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதிதான் இத்தகைய வாதங்கள் என்பதை எளிமையாகவும், ஆணித்தரமாகவும்நிறுவுகிறது இப்புத்தகம். யார் வேண்டுமானாலும் வாசித்து விடக்கூடிய எளிய நடையில் அமைந்தது இச்சிறு நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.