அந்தரங்கம் இனிமையானது
இந்தியக் கலாசாரத்தின் கட்டமைப்பால் செக்ஸ் பற்றிய அறியாமையும் புரியாமையும் பய உணர்ச்சியும் இன்னும் விலகவில்லை. செக்ஸ் என்பது பசி, தூக்கம், தாகம் போல இயற்கையான ஓர் உணர்வு. எல்லா உணர்வுகளையும் சரியாக உள்வாங்கிக்கொள்ளும் நாம், செக்ஸ் உணர்வை மட்டும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் பருவ வயதில் ஏற்படும் பாலுணர்வு சார்ந்த இயல்பான மாற்றம்கூட மனதில் பயத்தைப் பரப்பிவிடுகிறது. அந்த உணர்வை வெளியில் சொல்லத் தயக்கம். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு நிம்மதி போகிறது. அதேபோல பல தம்பதிகளுக்குள் செக்ஸ் சார்ந்த சந்தேகத்தாலும் தயக்கத்தாலும் வருந்தி வாழ்தலும் பின்னர் பிரிந்துபோதலும் நடைபெறுகிறது.இப்படிப்பட்ட பிரச்னைகளுக்குத் தெளிவான தீர்வுகளைச் சொல்கிறது இந்த நூல். ‘சொல்லித் தெரிவது மன்மதக் கலை’ என்கிறார் டாக்டர் ஷாலினி. காமத்தைப் பற்றிய உளவியல் ரீதியான வழிமுறைகளைச் சொல்ல வேண்டியது அவசியம் அல்லவா? அதைச் சொல்கிறது இந்த நூல். செக்ஸ் பற்றி ஆதி முதல் அந்தம் வரை, எல்லா விவரங்களையும் அறிந்துகொள்ளவும் ஆரோக்கியமான, இனிமையான செக்ஸ் வாழ்க்கைக்கும் வழிமுறைகளைச் சொல்லி, செக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு சிறப்பான விளக்கங்களைச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். உங்கள் அந்தரங்க வாழ்க்கை இனிமையாக நிலைத்து நீடிக்க இந்த நூல் சிறந்த வழிகாட்டி!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.