அடிப்படைத் தமிழ் இலக்கணம்
இப்பாடநூல் பள்ளி உயர் வகுப்புகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், பிற உயர்கல்வி நிறுவனங்களிலிம் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் சற்று விரிவாக அமைந்துள்ளது. எழுத்தியல், சொல்லியல், தொடரியல், புணரியல் என்னும் நான்கு பிரிவுகளில் தமிழ் இலக்கண அமைப்பினைப் புதிய நோக்கில் விளக்குகிறது இந்நூல்.
மரபுவழி இலக்கணக் கருத்துகளோடு நவீன மொழியியல் கருத்துகளையும் இணைத்து, தற்காலத் தமிழ் மொழியின் இலக்கண அமைப்பை மிக எளிமையாக விளக்க இந்நூல் முயல்கிறது.
கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளாகப் பல்வேறு மொழியியலாளர்கள் தமிழ் மொழியின் இலக்கண அமைப்புப் பற்றி் ஆராய்ந்து கண்ட முடிவுகள் பலவற்றை இந்நூல் ஆதாரமாகக் கொண்டுள்ளது. அவ்வகையில். பல புதிய இலக்கணக் கருத்துகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் : எம். ஏ. நுஃமான்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.