சமணமும் தமிழும் - மயிலை சீனி. வேங்கடசாமி
சமணமும் தமிழும் - மயிலை சீனி. வேங்கடசாமி
மயிலை சீனி. வேங்கடசாமி 1940 முதல் இந்நூலை எழுத தொடங்கினார். 1954-ல் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இந்நூலை வெளியிட்டது. இந்நூலுக்கு முன்னோடியாக மயிலை சீனி.வேங்கடசாமி காந்தருவதத்தையின் இசைத்திருமணம் என்னும் நூலை டிசம்பர் 23, 1943-ல் வெளியிட்டார். அதில் சமணமும் தமிழும் என்னும் நூல் எழுதப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடப்படுகிறது. இது முதல்நூல் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதி வெளிவரவில்லை. இந்நூலை எழுதிய பின் தமிழ்ச்சூழலில் இருந்து தனக்கு ஆதரவு இல்லாமையால் பெட்டியில் போட்டு வைத்திருந்ததாகவும் பத்தாண்டுகளுக்குப் பின் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர் வ.சுப்பையா பிள்ளை கோரியதனால் பிரதியை தேடியபோது அவை செல்லரித்து போயிருந்தன என்றும், பல ஆண்டு உழைப்பு வீணானமையால் மீண்டும் எழுதியதாகவும், ஆனால் இரண்டாம் பகுதியை எழுதி முடிக்க முடியவில்லை என்றும் மயிலை சீனி வேங்கடசாமி முன்னுரையில் சொல்கிறார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.