
மநுதர்மத்திற்கு எதிரான முற்போக்குத் தமிழ் மரபு
இந்திய ஆட்சியாளர்களாக நடுவண் அரசில் வலுவாகக் காலூன்றி உள்ள 'பின்னணியில் மநுதர்மத்தின் ஆட்சியை நம்மீது திணிக்கும் முயற்சிகள் பலமாகவும், பரவலாகவும் நடைபெற்று வருகின்றன. மாட்டுக்கறிக்கு தடை, பக்ரீத்துக்கு விடுமுறை இல்லை என அறிவித்தல், பகுத்தறிவாளர்களை சுட்டு வீழ்த்துதல், எழுத்தாளர்களை முடக்குதல், 'பகவத்கீதையை தேசியப் புனித நூலாக்குதல் என அவர்களின் தாக்குதல்கள் இடைவெளியின்றித் தேசம் முழுவதும் தொடர்கின்றன. இவ்வேளையில் தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டு வரலாற்றைக் காலவரிசைப்படி சொல்லி, ஒவ்வொரு காலத்திலும் முற்போக்காக ஏற்கத்தக்க மரபுக் கூறுகளாக அமைந்தவற்றைச் சுட்டிக்காட்டியபடி நகர்கிறது இந்நூல்.சமூக இயங்கியல் நோக்கில் வரலாற்றைப் பார்த்திருக்கும் பார்வைதான் இச்சிறுநூலின் பலம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.