Skip to content

நான் ஏன் இந்து அல்ல

Sold out
Original price Rs. 190.00 - Original price Rs. 190.00
Original price Rs. 190.00
Rs. 190.00
Rs. 190.00 - Rs. 190.00
Current price Rs. 190.00

நான் ஏன் இந்து அல்ல? -காஞ்சா அய்லய்யா

"நான் மட்டுமன்று, இந்திய தலித் பகுஜன்கள் அத்தனை பேரும் இளமையிலிருந்தே கலாச்சாரத்தின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ ‘இந்து’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதேயில்லை. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்ப்பனர்கள், பனியாக்கள் ஆகியோரிடமிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் என்று மட்டும் சொல்லக் கேட்டிருக்கிறோம்."

இது இந்நூலாசிரியரின் சினமூட்டக்கூடிய அறிவிப்புகளில் ஒன்று. தம்மை ஒரு தலித் பகுஜன் என அடையாளப்படுத்தும் இவர், சுரண்டுதலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான வெகுமக்களில் ஒருவன் என்கிறார்; உணர்ச்சி பொங்கும் கோபத்துடனும் எள்ளலுடனும் இன்றைய இந்தியாவின் நிலைமையை விவரிக்கிறார்;

தலித் பகுஜன்களும் இந்துக்களும் சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியில் எவ்விதம் வேறுபட்டிருக்கிறார்கள் என்பதையும் கவனப்படுத்துகிறார். குழந்தைப் பருவம், குடும்ப வாழ்க்கை, சந்தை உறவுகள், அதிகார உறவுகள், ஆண்-பெண் தெய்வங்கள், இறப்பு, இந்துத்துவம் ஆகியவை குறித்த ஏராளமான கருத்துகளை தலித்பகுஜன் சமூகத்திடமிருந்து சேகரித்து அதுவொரு நீதிமிக்க சமூகம் என்றும் நிறுவுகிறார்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.