கறுப்புப் பணத்தின் கதை
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் நாள் இரவு, பண மதிப்பிறக்கம் பற்றிய அறிவிப்பை இந்தியப் பிரதமர் வெளியிட்ட பிறகு ‘கறுப்புப் பணம்’ என்ற் பதம் பல கடுமையான விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இவ்வளவு பெரிய தாக்கம் இந்தியாவில் இதுவரை இருந்ததில்லை என்றுகூடச் சொல்லலாம். கறுப்புப் பணம் என்றால் என்ன, அது எவ்வாறு உருவாக்கப்படுகிறது, அதனை எப்படி மதிப்பிடுவது, அதனால் விளையும் ஆபத்துக்கள் யாவை, அதனை ஒழிக்க இந்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைக்கள் யாவை, அந்த நடவடிக்கைகளின் முடிவுகள்தான் என்ன போன்ற அடுக்கடுக்காகத் தோன்றும் வினாக்களுக்கு, இக்குறு நூலில் பதில் அளிக்கிறார். பொருளியல் பேராசிரியர் ச.அய்யம்பிள்ளை. இந்தியப் பணவியல் வரலாற்றை எளிதாக அறிந்துகொள்ளவும் கறுப்புப் பணம் பற்றிய பீதியை அகற்றவும் இந்நூல் கண்டிப்பாக உதவும்