
தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்
தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் - முனைவர் அரங்க மல்லிகா
******
மலைக்கோட்டை நகரமான திருச்சிராப்பள்ளியில் பிறந்து, வளர்ந்து கல்வி பயின்ற மல்லிகை இவர். தமிழின்பால் ஆர்வம்கொண்டு தமிழ் இலக்கியம் பயின்று, பின்னர் பிற இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்ததோடு ஆங்கிலம், இந்தி போன்ற பிற மொழி இலக்கியங்களிலும் தன்னுடைய தேடலைத் தொடர்பவர்.
இவரது எழுத்து கவிதையாக, கட்டுரையாக, ஆய்வுக் கட்டுரையாகச் சிந்தனையில் உருப்பெறுகிறது. பேராசிரியப் பெருமக்களின் வழிநடத்துதல், ஊக்குவித்தலால் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று, தனக்குரிய களமாகப் பெண்ணியத்தைத் தேர்ந்த, அதன் வேர்களைச் சங்க இலக்கியங்களிலும் ஆங்கில இலக்கியங்களிலும் தேடுபவர்.
அண்மைக் காலத்தில் பெண்ணியத்தோடு தலித்தியத்தையும் தனது ஆய்வுக் களமாகக் கொண்டு முனைந்து செயலாற்றுபவர். உலகம் முழுக்க தன்னுடைய பரந்த பார்வையால் சுற்றிவந்து முழுமைபெற எண்ணுபவர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.