Skip to content

ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 6)

Save 5% Save 5%
Original price Rs. 135.00
Original price Rs. 135.00 - Original price Rs. 135.00
Original price Rs. 135.00
Current price Rs. 128.25
Rs. 128.25 - Rs. 128.25
Current price Rs. 128.25

ஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரையின் கட்டுரைத் தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்து. வரலாறுகளைப் புரட்டி - அவர் கண் முன்னால் விரித்து வைக்கும் செய்திகள் , நிகழ்வுகள் அனைத்தும் தெவிட்டாத விருந்து.

இன்றைய தலைமுறைக்குப் படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதற்கு முடிவதில்லை. எவற்றைப் படிக்க வேண்டும் என அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் யாருமில்லை.

அவர்களுடைய அறிவுப் பசியைத் தீர்க்கும் விதத்தில், தான் பெற்ற உலக அனுபவங்கள், தான் படித்த புத்தகங்களின் சாரங்கள் இவற்றைக் கலைஞர் தொலைக்காட்சியின் ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ உரைத் தொகுப்பின் மூலமாக நமக்குத் தருகிறார் ஐயா சுப.வீரபாண்டியன் அவர்கள். அந்த உரைத் தொகுப்பின் ஒரு பகுதி புத்தக வடிவில்  இப்போது உங்கள் கரங்களில் தவழ்கிறது.


புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.