இருட்டில் திருட்டு ராமன்
நான் எழுதிய சிறியதும் பெரியதுமான கட்டுரைகளின் தொகுப்பு இது. தீயின் குழம்புபோல - எரிமலைக் குழம்புபோலச் சுட்டெரிக்கும் கருத்துகளைக் கொண்டவை. இதிகாசம் எனும் பெருங்கதைகளை வரலாறாகப் பேசுவதும், கதை மாந்தர்களைக் கடவுளாகக் கொண்டாடுவதும், கற்பனைக்கதைகளின் அடிப்படையில் நாட்டு வரலாற்றைக் கூறுவதும் மலிந்து வரும் இன்றையச் சூழலில் இவை தேவை.
இந்திய மக்களில் பெரும்பான்மையோரின் மதம் தீவிர வாதமாக உருவெடுத்து மாற்றுக் கருத்து கொண்டோரைக் சொல்வதுமாக வளர்க்கப்பட்டுவரும் நிலை இன்று நாட்டில்! அன்று, இதே நாட்டில் மாற்றுக் கொள்கை கொண்டோரும் எப்படி கொண்டாடப்பட்டனர் என்பதை விவரிக்கும் கட்டுரைகள் - கடவுள் மறுப்பேகூட இந்துமதத்தின் அங்கமாக விளங்குகிறது என்பதை விளக்குவன. பிற கொள்கையினர் பரிகசித்துப் பேசும் வகையிலான "கதைகள்” இந்து மதத்தில் இடம் பெற்றிருப்பதை எடுத்து இயம்புவனவாகச் சிலமட்டும் இடம்பெற்று உள்ளன.
அறிவுக்கரசு