திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா? - நூலாசிரியர் பற்றி

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/thirukkural-sasththirangalin-saarama
 
நூலாசிரியர் பற்றி

திரு.மஞ்சை வசந்தன் அவர்கள் தமது 24ஆம் வயதில் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம் நூலுக்கு மறுப்பாக "அர்த்தமற்ற இந்து மதம்" எழுதி வெளியிட்டு அவரை நேரில் பொதுமேடையில் சந்தித்து சவாலுக்கு அழைத்தவர். 54ஆம் வயதில் "திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்னும் நூலுக்கு மறுப்பாய் "ஆரியத்தால் வீழ்ந்தோம்; திராவிடத்தால் எழுந்தோம்" எனும் நூல் எழுதியவர். இது அவரது மூன்றாவது மறுப்பு நூல். இவர் பெரியார் கொள்கை சார்ந்து 35க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.

 

திருக்குறள் சாஸ்திரங்களின் சாரம் என்பது முதல்தர மோசடி!

வள்ளுவர் ஆரிய தர்மத்துக்கும் கலாச்சாரத்திற்கும் எதிராக தமிழ் மரபுப்படி (மனிதநேய மரபுப்படி) குறள் எழுதியவர்.

ஆரிய கலாச்சாரம் - பிறவி பேதம் கூறுவது. தமிழர் பண்பாடு - “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்கிற சமத்துவம் காப்பது.

ஆரியர்களின் வருணாசிரம தர்மத்திற்கு ஏற்ப ஓர் இல்லத் தலைவனின் கடமையை மனுதர்மம் கூறுகிறது.

மனுதர்மம் - பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர பிரிவுகளை ஏற்று அதன்படி கருத்துக் கூறுவது. திருக்குறள் - மனிதர்க்குப் பொதுவான கருத்துக் கூறுவது. அப்படியிருக்க, மனுதர்மக் கருத்தை எடுத்து வள்ளுவர் திருக்குறள் எழுதினார் என்பது அறிவு நாணயமாகுமா?

மனுதர்மம் குடும்பத் தலைவன் கடமையாகக் கூறும் போது, “பிராமண குடும்பத் தலைவன் தன் வீட்டிற்கு விருந்தினராக வரும் வைசிய, சூத்திரர்களை, தன் வீட்டு சமையல்காரன் சாப்பிடும்போது அவர்களோடு சேர்ந்து சாப்பிடச் செய்ய வேண்டும்" என்று கூறுகிறது.

(மனுதர்மம், அத்தியாயம் மூன்று, சுலோகம் - 112.)

குடும்பத் தலைவன் தன் வீட்டுக்கு வந்தவர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்று மனுதர்மம் கூறுவதைப் படியுங்கள்.

''ஆசனம் (உட்காரும் இருக்கை), இளைப்பாரும் இடம் (கட்டில் முதலியவை), பணிவிடை போன்றவை உயர்ந்தவர்களுக்கு உயர்ந்தவையாகவும், தாழ்ந்தவர்களுக்குத் தாழ்ந்தவை யாகவும் இருக்க வேண்டும். தனக்கு நிகரானவர்களுக்கு தனக்கு நிகரானவை யாகவும் இருக்க வேண்டும்" என்கிறது.

(மனு: அத்.3, சுலோகம்:107)

இப்படி மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மத்திலிருந்து கருத்தை எடுத்து வள்ளுவர் திருக்குறள் எழுதினார் என்பது தப்பல்லவா? தெரிந்தே செய்யும் மோசடியல்லவா?

இந்நூலிலிருந்து...

Back to blog