தமிழர் திருமணமும் இனமானமும் - பதிப்புரை
தலைப்பு |
தமிழர் திருமணமும் இனமானமும் |
---|---|
எழுத்தாளர் | க.அன்பழகன் |
பதிப்பாளர் |
பூம்புகார் பதிப்பகம் |
பக்கங்கள் | 493 |
பதிப்பு | நான்காம் பதிப்பு - 2009 |
அட்டை | தடிமன் அட்டை |
விலை | Rs.300/- |
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/thamizhar-thirumanamum-inamaanamum-poompukar.html
பதிப்புரை
பன்மொழியில் பல்கலையில் ஆய்வும் பழந்தமிழாம் பொன்மொழியைத் தம்முயிராய்ப் போற்றும்
பெருமாண்பும்
இன்மொழியில் நாட்டின் இருளகற்றும் நற்றிறனும் என்மொழிவேன்! அன்பழகர் இந்நாட்டின்
பொன்மணியே!
தீந்தமிழ் ஈன்ற வளமெலாம் தமிழர்க்கு நல்கிய புரட்சிக் கவிஞரின் புகழ்மாலை இது. மேலும் ஆரியத்தை வென்றாளத் தோன்றியவர் குன்றாமறவக் குரிசிலார் அன்பழகர்!, 'திராவிடரின் நன்மைக்கே உழைப்போன்; எந்தத் தீமைக்கும் உளம் அசையான்; அறிவுமிக்கான்!' என 48 ஆண்டுகட்கு முன்பே புரட்சிக்கவியால் பாராட்டப் பெற்ற பெருந்தகை ஆவார். பல ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவரும், கடந்த அரை நூற்றாண்டுக் காலம்; தந்தை பெரியாரின் தன்மானக் கொள்கையை ஏற்றும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டும் - தமிழர் இனமானம் காக்கவும், தமிழ் மொழி உரிமை நாட்டவும், பாதை மாறாமல் பணியாற்றி வருவது நாடறியும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக விளங்குவதுடன், கலைஞரின் அமைச்சரவையிலும் இருமுறை இடம் பெற்று அருந் தொண்டு ஆற்றியவர். அவரது பேச்சும் எழுத்தும் தமிழ் நாட்டு மக்களிடம் மண்டியுள்ள அறியாமை இருள் நீக்கவும், மூடநம்பிக்கைப் பிணி அகலவும் ஏதுவாகியுள்ளன.
சுயமரியாதைத் திருமணங்களில் அவர் ஆற்றிவரும் உரைகளைக் கேட்டவர் பலரும் - அந்த முறையை ஏற்றிட முன்வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிந்தனையைத் தமிழர் திருமணமும் இனமானமும்' எனும் புத்தறிவு பொங்கும் நூலாக்கி வெளியிடும் உரிமையை வழங்கியுள்ளமையைப் பெரும் பேறாகக் கருதி வணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நூலின் கருத்துக் கதிர்வீச்சினையும் எழுத்துச் செவ்வியினையும் எடுத்தியம்பி அணிந்துரை வழங்கி யுள்ளார் தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் நூலின் முகடாக.
பூம்புகார் பதிப்பகம் அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் போன்றோரின் நூல்களையும் அவர்களைக் குறித்து ஆய்வேடுகளையும் வெளியிடுவதை ஓர் கடமையாக மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் - இந்த நூலை வெளியிடுவதன் மூலம் - தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டியதொரு நல்ல பணியை நிறைவேற்றி யுள்ளோம் என்று மகிழ்கிறோம்.
- பூம்புகார் பதிப்பகத்தார்