சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - பகுதி 1 - பதிப்பகத்தார்
https://periyarbooks.com/products/suyamariyaadhai-iyakka-veeraanganaigal-part-1
செய்கிறேன். இந்த உணர்ச்சி வலுத்துத்தான் அதே முக்கியமானதும், முடிவானதுமான வேலையென்று இறங்கி விட்டேன். இந்த எண்ணத்தின் மீதே 'சுயமரியாதை இயக்கம்' ஆரம்பித்தேன்” என்று அய்யா அவர்கள் தன் உணர்வின் வெளிப்பாடுகளை பதிவு செய்தார். பெரியார் மட்டும் இத் தமிழ்மண்ணில் தோன்றி யிராவிடில் தமிழர்களான நாம் மீளாத்துயரில் மூழ்கி முகவரி இல்லாத இனமாக ஆகி இருப்போம். இவரின் உழைப்பால்தான் தமிழர்கள் உயிர்பெற்றனர்.
இந் நூல்களுக்கான அரிய கட்டுரைகளை தேடியெடுத்து தொகுத்துதவிய முனைவர் மு. வளர்மதி அவர்கள் நுழைவாயில் என்னும் தலைப்பில் மிகச்சிறந்த ஆய்வுரையையும் இல்லை, இல்லை இந்தத் தலைமுறைக்கு இடித்துரையாக எழுதியுள்ளார். இந்நூலுள் உள்ள கட்டுரைகளைப் படிக்கத் தொடங்குமுன் இவ் வம்மையாரின் நுழைவாயிலைப் படியுங்கள். நூலின் அருமையும் பெருமையும் புரியும்.
"சாதியாலும் மதத்தாலும்
சரிந்துபோன தமிழர்களே!
மொழியாலும் இனத்தாலும்
அடிமைப்பட்ட தமிழர்களே."
பெரியாரின் பெரும்படையில் பங்காற்றிய பெண்ணினத்தின் பெருமைக் குரிய விரமகளிரின் உரையைப் படியுங்கள். இன உணர்வு கொள்ளுங்கள். பெரியார் வழி நடவுங்கள்.
1930களில் தமிழில் வடமொழி சொற்களை கலந்து பேசுவதும் எழுதுவதும் வழக்கத்தில் இருந்ததால் இக் கட்டுரைகளிலும், சொற்பொழிவு களிலும் அவ்வாறே பரவலாக இருப்பதைக் காணலாம். அவற்றை அப்படியே வழங்கியுள்ளோம். வாசகர்கள் எளிதாகப் படிக்கும் வகையில் நீண்ட பத்திகளை மட்டும் சிறியனவாகப் பிரித்து வழங்கியுள்ளோம்.
"தமிழ்மதி" பதிப்பகத்தின் வெளியீடாக இந் நூலினைத் தமிழர்களுக்குக் கொடுத்துள்ளோம். ஏற்பதும் ஏற்காத்தும் தமிழர்களின் கைகளில் உள்ளது.
- பதிப்பகத்தார்