ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை எல்லா வயதினரையும் ஊக்கப்படுத்தும் ஒரு அருமருந்து. அவர் தலைசிறந்த இயற்பியல் அறிஞர் அண்ட வெளி இயலில் முதன்மையானவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை கிட்டி ஃபெர்கூசன் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு அரிய நூலாகப் படைத்துள்ளார். ஹாக்கிங்குடைய வாழ்க்கையோடு அவருடைய அறிவியல் ஆய்வும் இணைந்து செல்வதால், ஆசிரியர் ஹாக்கிங்குடைய அறிவியல் பயணத்தையும் விளக்குகிறார். எனவே வாழ்க்கை வரலாற்றை வியந்து படிக்கும் நாம் அண்டவெளி இயலையும் தெரிந்து கொள்கிறோம். இதனைத் தமிழாக்கம் செய்வது ஒரு அறை கூவலாகவே இருந்தது. இயற்பியலுக்கான கலைச்சொற்களைப் பாடநூல்களில் இருந்தும், தமிழ் குயூப் இணைய தளத்தில் இருந்தும் எடுத்துக் கொண்டேன். சிலவற்றை நானே உருவாக்கிக் கொண்டேன். மாற்றுச் சிந்தனை நூல்களையே வெளியிடும் எதிர் வெளியீடு என்னை இந்த நூலைத் தமிழாக்கம் செய்யப்பணித்தமைக்கு எனது நன்றி. நண்பர் அனுஷ் கானுக்கு எனது பாராட்டுக்கள். வழக்கம் போல அழகுற வடிவமைத்த ஜீவமணி அவர்களுக்கும், தட்டச்சு செய்து உதவிய அழகு மீனா அவர்களுக்கும் எனது நன்றி.
பேராசிரியர் ச. வின்சென்ட்
தொடர்புடைய மற்ற பதிவுகள்: